எமது பாடசாலையின் சூழல் ஆனது இயற்கை எழில் மிக்கது. நுழைவாயிலில் ஓங்கி வளர்ந்து இருக்கும்வாகை மரங்கள் இவை எந்நேரமும் குளிர்ச்சியையம் நிழலையும் பரப்பிக் கொண்டிருக்கும். தெற்கு வாயிலின் முன்னால் ஸ்ரீ மாங்காட்டு பத்திரகாளி அம்மாளின் கோபுர தரிசனமும் தினமும் கிடைக்கும் சூழல் ஆகவும் காணப்படுகின்றது. மேலும் பாடசாலையை சுற்றி இரு சமுகத்தவரும் வாழும் சூழல் காணப்படுகின்றது. அது மட்டுமல்லாமல் சூழ காணப்படும் பள்ளிவாசலும் மங்களராமாய விகாரையும் கமூக ஒற்றுமையை பறைசாற்றுகின்றன. பாடசாலை கட்டிடமும் நடுவில் மைதானமும் காணப்படுகின்றது.
"கௌரவமானதும் நாட்டிற்கு உகந்ததுமான சமூக இயைபாக்கமுடைய நற்பிரசைகள்"
கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளை முறையாக முன்னெடுத்துச் செல்லலசமூக விழுமியங்களுக்குப் பொருந்துவதான பண்பாடுகளை வளர்த்தல். இணைப்பாட விதானச் செயற்பாடுகளை மேம்படுத்தல். விஞ்ஞான தகவல் தொழில்நுட்ப முறை சார்ந்த செயற்றிறன்களை வளர்த்தல். மாணவர்களது அடைவு மட்டத்தை உயர்த்துதல்.ஆளுமைத்திறன்களை வளர்த்தல்.