இப் பாடசாலை 1966ஆம் ஆண்டு ஆடி(07ஆம்) மாதம் 03ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. இதன் ஸ்தாபகர் திரு.மு.தங்கசாமி அதிபர் ஆவார். அக் காலத்தில் ஏற்பட்ட இனப் பிரச்சினை காரணமாக ஏறாவூர் அலிகார் பாடசாலையில் தமிழ் மாணவர்கள் கற்க முடியாத நிலை ஏற்பட ஏறாவூரிலுள்ள புகையிலைச் சங்கமும் இணைந்து இப்பாடசாலையை ஓர் ஓலைக்குடிசையில் ஆரம்பித்தார்கள். முதலில் 30 மாணவர்களும் ஒரு ஆசிரியரும் இருந்தனர். பின்னர் தரம் 1-5 வரை 100-150 பிள்ளைகளுக்கு 5 ஆசிரியர் என்ற நிலையில் படிப்படியாக இப்பாடசாலை வளர்ந்தது.