பாடசாலை கீதம்
ஏறாவூர் தமிழ் மகா வித்தியாலயமே எழிலுறுமருங்கலை அகமே...
மாறிலா உணர்வொடு அறிவொளி மலரும் மாணவர் மகிழ்வுற வாழ்வோமே.
மகிதலம் முழுவதும் தமிழ் மணம் கமழ வல்ல நற்பணி பல தேர்வோமே... (ஏறாவூர்...)
அருகுரு அன்னையின் அன்பினில் விளைவோம் ஆண்டவன் அடியினைப் பணிவோமே.
பெருநலம் தரும் பல விழுமியம் அடைவோம். பேசரும் குரவரைத் தொழுவோமே. (ஏறாவூர்...)
மனிதர்கள் அனைவரும் ஒரு குலம் அறிவோம் மதங்களின் சமரசம் காண்போமே.
இனியொரு புதுவிதி எமக்கென வகுப்போம் இன்பமே எங்கணும் விதைப்போமே. (ஏறாவூர்...)
ஒழுக்கமே விழுப்பமென்றுணர்ந்ததை வளர்ப்போம். உன்னத மனநிலை படைப்போமே.
ஓர்மையும் நேர்மையும் உறுதியும் பெறுவோம். உயர்ந்த பண்பாட்டொடு வாழ்வோமே... (ஏறாவூர்...)






