மட்/ஏறாவூர் தமிழ் மகா வித்தியாலயம்

இல்ல விளையாட்டு போட்டி

351298674_1193226388010730_5120167544484949836_n.jpg
IMG_20250303_080832.jpg

பிரதி அதிபர் செய்தி

திரு.எஸ்.இந்துஜன்

இன்றைய நவீன விஞ்ஞான உலகில் பல புதுமையான நிகழ்வுகள் அரங்கேறிய வண்ணம் உள்ளது. கல்வி, மருத்துவம் மற்றும் பொருளாதாரம் போன்ற பல துறைகளைக் கூறலாம். அந்த வகையில் கல்வி நடவக்கைகளை நவீனமயப்படுத்த கல்வி அமைச்சு பல செயற்றிட்டகளை மேற்கொண்டு வருவது சிறப்பான செயற்பாடாகவே நான் பார்க்கின்றேன். அந்த வகையில் கல்வி அமைச்சின் மற்றுமொறு செயற்பாடுதான் “பாடசாலை வலைதள விருத்தி செயற்றிட்டம்” இச் செயற்றிட்டம் மூலம் ஒரு பாடசாலையின் முழு விபரங்களையும் அறிவதோடு பாடசாலையின் இயங்கு நிலையை உலகிலுள்ள அனைவரும் அவதானிக்க கூடியதாய் அமையும். இது நாடளாவிய ரீதியில் செயற்படுத்தப்படும் ஒரு செயற்றிட்டம் ஆகும். பாடசாலை வலைத்தளம் வசதி படைத்த பாடசாலைகளில் இருகின்றன. கல்வி அமைச்சின் கண்காணிப்பின் கீழ் எமது பாடசாலையில் முதன் முறையாக உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு காரனமாக இருந்த அதிபர் திருமதி. சுதாகரி மணிவண்ணன் அவர்கட்கும், தகவல் தொடர்பாடல் ஆசிரியை திருமதி. பிரியதர்சினி ஸ்ரீவாசன் அவர்கட்கும், ICT மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவருக்கும் மனப்பூர்வமான நன்றியை தெரிவித்து கொள்கின்றேன்.

திரு.எஸ்.இந்துஜன்
பிரதி அதிபர்
ஏறாவூர் தமிழ் மகா வித்தியாலயம்.