அதிபர் செய்தி
திருமதி.சுதாஹரி மணிவண்ணன்(BA,NDTE(MERIT),PGDE,PGDEM,MED)
எல்லையில்லாத பேராற்றலும், இயற்கை வளங்களும், அதிசயங்களும் நிறைந்த இந்த உலகில் பகுத்தறிவுடைய மனிதரின் ஆற்றலும் ஆளுமையும் பல உச்சங்களை இன்றையகாலத்தில் எட்டிவருகின்றமை சிறப்புக்குரியது. உலக ஓட்டத்திற்கு அமைய தம்மையும் இணைத்துக்கொண்டு முன்னோக்கி நகர்த்த வேண்டிய தேவை மாணவர் சமுதாயத்துக்கு அவசியமானது. அவர்களை வழிப்படுத்தி ஊக்குவிக்க வேண்டிய பாரிய பொறுப்பு பாடசாலைக்குரியது.
எனவே இன்றைய காலத்தின் தேவையுணர்ந்து, இணையத்தளமொன்றை உருவாக்கி எமது பாடசாலையின் அனைத்துச் செயற்பாடுகளையும் அதிலே நாளும் இற்றைப்படுத்தி உலகமயமாதல் எனும் உன்னத இணைப்பில் தம்மையும் இணைத்துக்கொள்ள எமது பாடசாலையின் இணையத்தளம் எமது மாணவச் செல்வங்களால் ஆசிரியர் திருமதி பிரியதர்சினி ஸ்ரீவாசனின் ஊக்ககம்மிகு வழிகாட்டலுடன் உருவாக்கப்பட்டமை பாராட்டுதற்குரியது. இச்செயற்பாடு குறித்து இப்பாடசாலையின் அதிபர் என்றவகையில் உள்ளத்தில் உவகைபொங்க பெருமிதம் அடைகின்றேன்.
இன்று உருவாகி நாளை மடிந்துவிடும் விட்டில் பூச்சியாய் இன்றி சுடர்விடும் சூரியனாய் எமது மாணவர் சமுதாயம் பரிணமிக்க இவ்விணையத்தளம் நிச்சயமாக வழிவகுக்கும் என்ற நம்பிக்கையோடு எனது நல்வாழ்த்துக்களை எம்மவர்களுக்குத் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன்.
திருமதி.சுதாஹரி மணிவண்ணன்(BA,NDTE(MERIT),PGDE,PGDEM,MED)
அதிபர்
ஏறாவூர் தமிழ் மகா வித்தியாலயம்.






